அலங்காநல்லூர் : ""அலங்காநல்லூர்
ஜல்லிக்கட்டு பேரூராட்சி சார்பில் நடக்கவிருப்பதால் பார்வையாளர்
கட்டணமில்லை,'' என, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.
இங்கு ஜன.,16ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. நேற்று முன் தினம் ஜல்லிக்கட்டு பணியினை ஆய்வு செய்த கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ""பேரூராட்சி நிர்வாகத்திடம் காலரி கட்டணம் வசூலிக்கக்
கூடாது; முக்கிய இடங்களில் மெகா திரை மூலம் ஜல்லிக்கட்டு பார்க்க வழி செய்யப்படும்,''
என்றார்."டுபாக்கூர்களுக்கு' சிக்கல்:
நிர்வாக அதிகாரிகள் பாலமுருகன், குணாளன் கூறியதாவது: பார்வையாளர் காலரி,
முக்கிய பிரமுகர்கள் காலரி, சுற்றுலாத்துறையினர் காலரி உட்பட அனைத்து
இடங்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் இளைஞர் படையினர் இருப்பர். மேலும்,
பத்திரிக்கையாளர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள், நிர்வாக அதிகாரி
மற்றும் விழாக்குழுவினரிடம் அனுமதி பெற வேண்டும். பலர் போலி அடையாள
அட்டையுடன் வருவதால் நிறைய சிக்கல் ஏற்படுகிறது. இதை தடுக்க, கலெக்டர் அனுமதியுடன் முதன் முறையாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.