திருமங்கலம் : திருமங்கலம் அருகே மினிவேன் - லாரி மோதியதில், 3 பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் பகுதியில் இருந்து கப்பலூர் சிட்கோவிற்கு காபிக்கான சிக்கரி பவுடரை ஏற்றிக் கொண்டு மினி வேன் சென்றதது. திருமங்கலம் குதிரைச்சாரிகுளம் விலக்கு அருகே, நெல்லையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு கருணை கிழங்குகளை ஏற்றிச் சென்ற லாரி பின்புறமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் ரோட்டில் கவிழ்ந்தன. இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேன் டிரைவர் சதீஷ்குமார், லோடுமேன்கள் முத்துமுனியாண்டி, வீரக்குமார் காயமடைந்தனர். .