Advertisement
தினமலர் முதல் பக்கம் » மதுரை மாவட்டம் »முக்கிய செய்திகள் செய்தி
பெண்ணுரிமைச் சட்டங்கள் விழிப்புணர்வு இல்லை: பயிற்சி முகாமில் வேதனை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,04:41 IST

மதுரை : "பெண்ணுரிமை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாததே பிரச்னைகளுக்கு காரணம்,' என, மதுரையில் போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, விருதுநகர் மகளிர் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களுக்கான "பெண்களும் சட்டங்களும்' தலைப்பில் இம்முகாம் நடந்தது. டி.எஸ்.பி., ராமநாதன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சின்னராக்கு முன்னிலை வகித்தார்.
ஐகோர்ட் வக்கீல் ஆர்.காந்தி பேசியதாவது: தேசிய குற்றப்பதிவேடு ஆவண புள்ளிவிவரங்களின்படி, ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 4.8 சதவீதம் அதிகரிக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், நாட்டில் டில்லி மாநிலத்தில்தான் அதிகம் நடக்கிறது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்காமல் தடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சட்டப்படியான உரிய நிவாரணம் பெற்று தருவதும் போலீஸ் கடமை. சட்ட ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, சட்டங்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் அவ்வப்போது வெளியிடும் தீர்ப்புகளை அறிந்திருப்பது அவசியம். பெண்ணுரிமை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது பிரச்னைகளுக்கு காரணம். பெண்கள் குறித்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்களை போலீஸ் அதிகாரிகள் கவனமாக களைய வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளில் பெண்களின் அடையாளம் குறித்து வெளியிடுவதோ பிரசுரிக்கக் கூடாது, என்றார்.

 

மேலும் மதுரை மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.