மதுரை : மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், திருமங்கலம் அருகே மேலக்கோட்டையில் பொங்கல் விழா, ஜன., 15ல்
நடக்கிறது.
தமிழர்களின்
கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன்,
வெளிநாட்டினருக்கு இங்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பொங்கல் விழா
கொண்டாடப்படும்.
இந்தாண்டு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ஜன., 16ல் காலை 9.30 மணிக்கு
அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு பயணிகள் பங்கேற்க
உள்ளனர். இரண்டு நாட்களிலும் காலை 9 மணிக்கு மேலவெளிவீதியில் உள்ள சுற்றுலா
அலுவலகத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் இலவசமாக அழைத்துச் செல்லப்
படுவர்.
ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை அலுவலர் தர்மராஜ் செய்து வருகிறார். மேலும் விபரங்களுக்கு, 0452 - 233 4757ல் தொடர்பு கொள்ளலாம்.