மதுரை : ""மதுரை ரயில்வே கோட்டத்தில், இரு ஆண்டுகளுக்கு
ரூ.2 கோடியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு ஒப்பந்தம்
விடப்பட்டுள்ளது,'' என, கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி தெரிவித்தார்.
மதுரை
ரயில்வே ஸ்டேஷனில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. இருபாலர்
மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பேரணியை துவக்கி வைத்து, கோட்ட மேலாளர்
பேசியதாவது:
ரயில்வேயில் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
பணிகள் தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டு, 65 சுகாதார பணியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு மற்றும் மூன்றடுக்கு "ஏசி' பெட்டிகளில்
மூட்டைபூச்சிகளை ஒழிக்க, நெல்லையில் கொசு புகை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு பயணிகளிடம் அடையாள அட்டை கேட்பது, அவர்கள் நன்மைக்காகவே,
என்றார்.
உதவி சுகாதார
அலுவலர் பஞ்சமுத்து, தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஞான
சகாயம்சாகு, கூடுதல் கோட்ட மேலாளர்
அஜீத்குமார்,
வர்த்தக மேலாளர் கோவிந்தப்பராஜ், ஸ்டேஷன் மேலாளர் லெனின்குமார்,
பி.ஆர்.ஒ., வேணுகோபால் பேசினர். உதவி சுகாதார அலுவலர் ஜமால் முகமது நன்றி
கூறினார்.