சென்னை:பொங்கல் பண்டிகையை, சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக ஏராளமான பயணிகள், ரயில் நிலையங்களில் நேற்று குவிந்தனர்.
முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், உட்கார இடமின்றி, ஏராளமான பயணிகள் நின்றபடி பயணம் செய்தனர்.
சென்னை எழும்பூரிலிருந்து, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும், பொங்கல் பண்டிகையொட்டி பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.
நேற்று காலை இயக்கப்பட்ட, திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், மதியம் இயக்கப்பட்ட வைகை மற்றும் மாலையில் இயக்கப்பட்ட, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில்,
முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தன.
நீண்ட வரிசை
மாலையில் இயக்கப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உட்பட, இரவு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், பயணம் செய்வதற்கு, பெட்டிகளில் இடம்பிடிப்பதற்காக, பிளாட்பாரங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
ரயில்வே போலீசார், வரிசை அமைத்து பயணிகளுக்கு உதவி செய்தனர். ஆனாலும், முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளில், ஒவ்வொரு ரயிலும், நூற்றுக்கணக்கான பயணிகள் நின்றபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
சென்ட்ரலிலிருந்து இயக்கப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் உட்பட, அனைத்து ரயில்களிலும் இதே நிலை இருந்தது.
தத்கால் டிக்கெட்
இன்று ரயில்களில் பயணம் செய்வதற்காக, "தத்கால்' வசதியில், டிக்கெட் எடுப்பதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம் மற்றும் மயிலாப்பூர் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்களில், நேற்று காலை, 5:00 மணியிலிருந்தே பயணிகள் வரிசையில் காத்திருந்தனர்.
காலை, 10:00 மணிக்கு, தத்கால் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டதும், சென்னை எழும்பூரிலிருந்தும், சென்ட்ரலிலிருந்தும் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும், பத்து நிமிடங்களில் அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இதனால், இதனால், படுக்கை வசதியுடன் டிக்கெட் கிடைக்காமல், ஆயிரக்கணக்கான பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.