குரோம்பேட்டை:குரோம்பேட்டையில்,
தொழிலதிபர் வீட்டின், பின்பக்க கதவை உடைத்து திருட்டு முயற்சி
நடந்துள்ளது. குரோம்பேட்டை, நியூ காலனி, 13வது குறுக்கு தெருவைச்
சேர்ந்தவர், ரமேஷ், 51. கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்
பொங்கலுக்கு கடந்த, 13ம் தேதி, தனது குடும்பத்துடன், சொந்த ஊரான மதுரைக்கு
சென்றார்.
நேற்று முன்தினம் மாலை, வீடு திரும்பினார். வீட்டின்
பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது.ரமேஷ்
தனது வீட்டில்,
உள்ள"எலக்ட்ரானிக் லாக்கரில்' நகை உள்ளிட்ட வற்றை
வைப்பது வழக்கம். திருடர்களால், லாக்கரை உடைக்க முடியவில்லை. இதனால்,
லாக்கரில் இருந்த பொருட்கள் தப்பின.
ரமேஷ் வீட்டின் முன்பக்கம்,
பின்பக்கத்தில் பொருத்தப்பட்ட கண் காணிப்பு கேமராக்களின் டி.வி.ஆர்.,
கருவியையும் திருடர்கள் தூக்கி சென்று விட்டனர். இதுகுறித்து,
குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.