சென்னை:கொடுங்கையூரில்
அரசு அதிகாரி வீட்டில், 25 பவுன் நகை மற்றும் பணத்தை, மர்ம நபர்கள் திருடி
சென்றனர். அதே பகுதியில், பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கிய, மர்ம
நபர்கள், மூன்று சவரன் நகையை திருடி சென்றனர்.கொடுங்கையூர், சூழ்புனல்கரை,
அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் விக்டர். இவர், அரசு வேளாண் துறை அதிகாரி.
இவரது தம்பி டைட்டர்ஸ். சொந்த வீட்டில், தம்பி மேல் மாடியிலும், அண்ணன்
கீழேயும் வசித்து வருகின்றனர். பொங்கலுக்காக, இருவரும் வீட்டை பூட்டி
விட்டு, காஞ்சிபுரத்திற்கு சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு
திரும்பிய போது, இரண்டு வீடுகளின் கதவுகள், பீரோக்கள் உடைக்கப்பட்டு,
மொத்தம், 25 பவுன் நகை மற்றும் பணம், 55
ஆயிரம் ரூபாய், திருடு
போயின.கைரேகைபோலீசாரின் முதற்கட்ட சோதனையில், மூன்று பேர்களின், கைரேகை
பதிவுகள் கிடைத்தன. அதை வைத்து, போலீசார் திருடர்களை தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.இதற்கு முன், எம்.கே.பி., நகரில் கல்யாண வீட்டுக்கு
சென்றவர் வீட்டிலும், கிருஷ்ணமூர்த்தி நகரில், மாமியார் வீட்டுக்கு
சென்றவர் வீட்டிலும், திருட்டு நடந்தது. அவற்றில் யாரும் சிக்காத நிலையில்,
தற்போது வெளியூர் சென்றிருந்த, அரசு அதிகாரி வீட்டில் திருட்டு சம்பவம்
நடந்துள்ளது.ஓட்டை பிரித்து...கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை
சேர்ந்தவர் ரவிக்குமார், 46; ஓவியர். இவரது மனைவி ராணி, 40. இவர், நேற்று
மதியம், 12.30 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். ஒரு மணி
நேரத்திற்கு பின், வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் மேற்கூரை ஓடு
பிரிக்கப்பட்டு இருந்தது.வீட்டின் உள்ளே இருந்த பீரோவில், மூன்றரை சவரன்
சங்கிலி காணாமல் போயிருந்தது. இதுகுறித்தும், கொடுங்கையூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அக்கம்பக்கம் வசிப்பவர்களும் தங்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதில் உஷாராக இருக்க வேண்டும். நமக்கென்ன என்று வீட்டுக்குள் பூட்டிக்கொண்டிருந்தால், பகலிலே இப்படி துணிகர கொள்ளை நடப்பது யார் கண்களிலும் படுவதில்லை. கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், தெருவுக்குத்தெரு காவலர்களை கண்காணிப்புக்கு அமர்த்துவது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும். Frie n ds of Police இயக்கத்தில் இணைந்திருக்கும் இளைஞர்கள் அந்த டி-ஷர்டை பந்தாவாக போட்டுக்கொண்டு திரிவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளிலும் போலீசாருக்கு உறுதுணையாக செயல்படுவது அவசியம்.