சென்னை:"டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய @வண்டும்' என, தன் கூட்டணியில் உள்ள, மத்திய அரசை, இதமாக வலியுறுத்தியுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மானிய விலை சிலிண்டர்களை, ஆண்டுக்கு, 12 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என, பதமாக, @வண்டு@காளும் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:சிறிய அளவில், டீசல் விலையை உயர்த்தும் அனுமதியைக் கூட, மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிப்பது தவறான முடிவு. டீசல் விலை உயர்த்தப்பட்டால், அது வேறு சில பொருள்களின் விலை உயர்வுக்கும் வழி வகுக்கும்.மத்திய அரசு, டீசல் விலை உயர்வு பிரச்னையில், மீண்டும் பரிசீலனை செய்து, ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மானிய விலை, சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 9 ஆக உயர்த்தியுள்ளது. பார்லிமென்ட் நிலைக்குழு அந்த எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 12 ஆக, உயர்த்த வேண்டுமென, பரிந்துரை செய்திருந்தது.
சமையல் காஸ் சிலிண்டர் விநி@யாகத்தில், நிதிச்சுமை ஏற்பட்ட போதிலும், அதை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, அடித்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க, மாதம் ஒரு சிலிண்டர் வீதம், மானிய விலை சிலிண்டர்களை வழங்கியே தீர வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.அறிக்கையில் குழப்பம்மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து விட்டு, "நான் கண்டிக்கவில்லை' எனக் கூறுவது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது.சமீபத்தில், ரயில் கட்டண உயர்வுக்கு முதலில் கண்டனம் தெரிவித்து விட்டு, பின், "நான் கண்டனம் தெரிவிக்கவில்லை' என்றார்.
இந்நிலையில், டீசல் விலை உயர்வு குறித்து, நேற்று கருணாநிதி, ஒரு அறிக்கை விடுத்தார்.அந்த அறிக்கையின் தலைப்பில், "டீசல் விலை உயர்வுக்கு கலைஞர் கண்டனம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், அறிக்கையில், "மத்திய அரசு டீசல் விலை உயர்வு மறுபரிசீலனை செய்ய @வண்டும்' எனக் கூறி உள்ளார். அவரது அறிக்கையில், எந்த இடத்திலும், மத்திய அரசுக்கு கண்டனம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.