சென்னை:பல்கலையுடன் இணைக் கப்படாத கல்லூரிகளில், மருத்துவம் பயிலும் மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை நிர்வாகம் எச்சரித்துள்ளது.பல்கலை பதிவாளர் சிவசங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையுடன் இணைக்கப்பட்ட அரசு மற்றும் தனி யார் மருத்துவக் கல்லூரிகளின் விவரம், பல்கலை இணையதளத்தில் (தீதீதீ.tணட்ஞ்ணூட்த.ச்ஞி.டிண) வெளியிடப்பட்டுள்ளது.இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, 2013-14ம் கல்வியாண்டில், பல்கலையில் இணைக்கப்படும் மருத்துவக் கல்லூரிகளின் விவரங்கள், இந்த ஆண்டு, ஜூலையில், இணையத்தில் வெளியிடப்படும்.இக்கல்லூரிகளை தவிர, பிற மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்திருந்தால், அதற்கு பல்கலை பொறுப்பாகாது. அம்மாணவர்களின் பட்டம் பதிவு செய்யப்படாததுடன், அக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.இவ்வாறு சிவசங்கீதா தெரிவித்துள்ளார்.