district news | சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வெற்றியின் திறவுகோல்,நினைவாற்றல் வளர பயிலரங்கம் Dinamalar
சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் வெற்றியின் திறவுகோல்,நினைவாற்றல் வளர பயிலரங்கம்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜன
2013
02:38

தூத்துக்குடி: தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி எஜீகேஷனல் டிரஸ்ட் மற்றும் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி இணைந்து நினைவாற்றல் வளர, மாணவர்களுக்கான பயிலரங்கமும், வெற்றியின் திறவுகோல் என்ற பெற்றோர்களுக்கான பயிலரங்கமும் நடந்தது.
சக்தி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியின் சார்பில் ஹாரீஸ் ஹாலில் பதினாறு கவனகர் திருக்குறள் ராம.கனக சுப்புரத்தினம் மாணவர்களுக்கு நினைவாற்றல் வளர பல்வேறு பயிற்சியளித்தார். பயிற்சியில் 1330 குறளில் எதை கேட்டாலும் , அதன் வரிசை எண் எந்த அதிகாரம் மற்றும் அந்த குறளையும் சொல்வதோடு தலைகீழாகவும் குறளை சொல்லி காண்பித்தார். மேலும் இருபது இலக்க எண்களில் பல்வேறு நேரத்தில் ஒவ்வொருவரும் சொல்லிய எண்களை அந்தந்த இலக்கங்களில் குறிக்க செய்து அதனை பாராமல் சரியாக சொன்னதோடு, அதனையும் தலைகீழாகவும் சொல்லி காண்பித்தார். மேலும் இருபது இலக்க எண்களில் பல்வேறு நேரத்தில் ஒவ்வொரு வரும் சொல்லி எண்களை அந்தந்த இலக்கங்களில் குறிக்க செய்து அதனை பாராமல் சரியாக சொன்னதோடு, அதனையும் தலைகீழாகவும் சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார். நினைவாற்றலை வளர்க்க மனதை மந்திரத்தால் கட்டவும், மூச்சை கவனிக்கவும், நெற்றிக்கண்ணை திறக்கவும் செய்தார். தன்னைப்போல் அனைவரும் நினைவாற்றல் பெறலாம் என கூறினார்.
மாலையில் பெற்றோர் ஆசிரியர்களுக்கான பயிலரங்கத்தில் தேகசுத்தம், நல்லசித்தம்,உயர்வான எண்ணங்கள் கொண்டவர்கள் எமனையும் வெல்லலாம் என வெற்றியின் திறவுகோல் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார். சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் ஜெயாசண்முகம் அனைவரையும் வரவேற்றார். டி.ஏ. சில்க்ஸ் தெய்வநாயகம், பிளாசம் பில்டர்ஸ் வசந்த், மலர் கன்ஸ்ட்ரக்ஷன் மாரிமுத்து, ஏ.எஸ்.கே. பிரபாகர், பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கீஜே வாட்டர், அன்னை ஜீவல்லர்ஸ், பாலம்ஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவாக சக்தி எஜீகேஷன்ஸ் டிரஸ்டி சண்முகம் நன்றி கூறினார்.

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X