சென்னை:சென்னையில், "தினமலர்' நாளிதழும், "ஆரோக்கியா'வும் இணைந்து நடத்திய பெண்கள் கல்லூரி கைப்பந்து போட்டியில், எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரி அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சென்னை, "தினமலர்' நாளிதழும், "ஆரோக்கியா'வும் இணைந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லூரி வளாக மைதானத்தில், சென்னை பெண்கள் கல்லூரிகளுக்கான, இரண்டு நாள் விளையாட்டு போட்டிகளை நடத்தின.
இரண்டாவது மற்றும் கடைசி நாளான நேற்று, எம்.ஜி.ஆர்., ஜானகி மகளிர் கல்லூரி அணி, 7-3 என்ற புள்ளி கணக்கில், குரோம்பேட்டை, எஸ்.டி.என்.பி., வைஷ்ணவா மகளிர் கல்லூரியை வீழ்த்தியது.
இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, குரோம்பேட்டை எஸ்.டி.என்.பி., மாணவி அணி மாணவி சத்யா, சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
நிறைவு விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, "தினமலர்' வர்த்தகப் பிரிவு மேலாளர் ரா.லட்சுமிபதி, முதல் இடம் பிடித்த எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரி அணிக்கு, கோப்பையை வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த, வைஷ்ணவா கல்லூரி அணிக்கு, தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் கோப்பையை வழங்கினார்.
எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி துணை முதல்வர் லட்சுமி பாலாஜி, மாணவர்கள் தலைவர் அபிதா, "ப்ரூட்நிக்' துணை தலைவர் ஸ்ரீகந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போட்டிக்கு, "நவ் லைப், ஏர்செல், டைகர் பிஸ்கெட், ப்ரூட் நிக், டீம்' (குடிநீர்) ஆகியோர், "கிப்ட் ஸ்பான்சராக' பங்கேற்றனர்.