Advertisement
உணவு, தண்ணீரின்றி 166 மாடுகள் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜன
2013
21:36

சென்னை:வேப்பேரியில் உள்ள கால்நடை துயர் தடுப்பு கழகத்தில் ஒப்படைக்கப்பட்ட, 166 மாடுகள், தகுந்த உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.100 ரூபாய்:ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு ஆறு லாரிகளில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட, 166 மாடுகள், வரைமுறை இன்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து செல்லப்படுவதாக, கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிந்தது.
இதையடுத்து, டி.எஸ்.பி., ஜோஸ் தங்கய்யா தலைமையிலான போலீசார், ஆரம்பாக்கம், கவரைப்பேட்டை பகுதி வழியாக கேரளாவுக்கு செல்ல இருந்த, 166 மாடுகளை பறிமுதல் செய்தனர். லாரிகளில் மாடுகளை அடைத்து வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.பிடிபட்ட, 166 மாடுகளும், வேப்பேரியில் உள்ள கால்நடை துயர் தடுப்பு கழகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ஒரு மாட்டுக்கு, 100 ரூபாய் வீதம், மாட்டு உரிமையாளர்களிடமே வசூல் செய்து மாடுகளை கால்நடை துயர் தடுப்பு கழகத்தினர் பராமரித்து வருகின்றனர்.
கொசு உற்பத்தி:ஆனால், அந்த மாடுகளை சரியான முறையில் பராமரிப்பதில்லை என, கழகத்தின் அருகே வசிப்போர், குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த, 22ம் தேதி கொண்டு வரப்பட்ட மாடுகளுக்கு, முறையாக குடிநீர் மற்றும் உணவு வைப்பதில்லை. மாடுகள், இரவு, பகல் பாராமல் கத்திக் கொண்டே இருக்கின்றன. சாணத்தால் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிகளவு உற்பத்தியாகி எங்களை பாடாய்படுத்துகின்றன' என்றனர்.
உணவின்றி தவிப்பு:இது குறித்து, கால்நடை துயர் தடுப்பு கழகத்தினர் கூறுகையில், "நாங்கள், மாட்டு உரிமையாளர்களிடம் ஒரு மாட்டுக்கு, 100 ரூபாய் வீதம் வாங்கி, முறையாக உணவு மற்றும் குடிநீர் வழங்கி வருகிறோம். கால்நடை மருத்துவர் ஒருவரையும் பணியமர்த்திஉள்ளோம். எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாடுகளை, எங்கள் இடத்தில் தான் வைக்க முடியும்' என்றனர்.இருந்தாலும், மாடுகளில் சிலவற்றுக்கு மட்டும் தீனி போடப்பட்டும், மற்ற மாடுகளுக்கு குடிநீர் கூட வைக்கப்படாமலும், கத்திக்கு தப்பிய மாடுகள் உணவின்றி தவிப்பது தெரியவந்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.