செங்குன்றம்:இந்திய அளவில், 16 அணிகள் கலந்து கொண்ட கால்பந்து போட்டியின் இறுதியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது.சென்னை செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஊராட்சியில், டான் பாஸ்கோ பள்ளி சார்பில், இந்திய அளவிலான கால்பந்து போட்டிகள், கடந்த, 15ம் தேதி முதல் நடந்தன. இதில், தமிழகம், கேரளா, கோவா உள்ளிட்ட, 16 அணிகள் கலந்து கொண்டன.நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில், ஐ.சி.எப்., அணியுடன் மோதிய பெங்களூரு அணி, 2 கோல் அடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை, இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.