புதுச்சேரி:சோலை
நகரில் சமுதாய நலக்கூடத்தைத் திறக்க, இந்திய கம்யூ.,வினர் நடத்திய
போராட்டத்தால் சமுதாய நலக்கூடம் திறந்து விடப்பட்டது.சோலை நகர் பகுதியில்
புயல் பாதுகாப்பு மையத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. நீண்ட
காலமாக மூடி கிடக்கும் இந்த சமுதாய நலக்கூடத்தின் பூட்டை உடைக்கும்
போராட்டம் நடத்தப்படும் என சோலை நகர் இந்திய கம்யூ., கிளை
அறிவித்திருந்தது. இதன்படி நேற்று காலை சமுதாய நலக்கூடம் அருகில் நடந்த
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் இன்பமொழி தனசீலன் தலைமை தாங்கினார்.
மாநில பொருளாளர் சலீம், நகர செயலாளர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நகர துணை செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் ஏகாம்பரம், துணைச் செயலாளர்
மோகன், மாநிலக்குழு ஆனந்து, சிவகுருநாதன், தயாளன் உள்ளிட்டோர்
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின், இந்திய
கம்யூ.,வினர் சமுதாய நலக்கூடத்தின் பூட்டை உடைக்க முயற்சி செய்தனர்.
அதற்குள் புதுச்சேரி நகராட்சி உதவி பொறி யாளர் அங்கு வந்தார்.போராட்டத்தில்
ஈடுபட் டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமுதாய நலக்கூடத்தைத்
திறந்தார். தொடர்ந்து சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன் பாட்டிற்கு
விடப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூ., நிர்வாகிகள்
அங்கிருந்து கலைந்து சென்றனர்.