ஆனைமலை:வால்பாறையில் ஏற்படும் மனித-வன உயிரின மோதலை தடுப்பது பற்றிய ஆலோசனைக்கூட்டம் பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் ராஜீவ் கே ஸ்ரீ வஸ்தவா தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். வால்பாறை வனச்சரக அலுவலர் கிருஷ்ணசாமி, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் முகமது அலி, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் கணேஷ்ராமும், வால்பாறை சுற்றுப்பகுதியில் எஸ்டேட் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.
வால்பாறையில் வன உயிரினங்களின் தாக்குதலை தடுக்க வனத்துறை பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இரவு நேரத்தில் ரோந்து தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டு வேட்டை தடுப்பு காவலர்கள் மூலம் ரோந்து செல்லும் பணியும் நடந்து வருகிறது. யானைகள் ரேஷன் கடைகளை உடைப்பதும், வீடுகளை சேதப்படுத்துவதும் தொடர்கிறது. வனத்துறையிடம் பொதுமக்கள் சார்பில் மோதலை தடுக்க பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கை நிறைவேற்ற வனத்துறையும் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆலோசனை கூட்டத்தில், இதில் வனத்துறையினருடன் எஸ்டேட் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.
எஸ்டேட் பகுதிகளில் இறைச்சிகடைகள் தடை செய்வது, ரேஷன் கடைகளை குறைத்து மக்களுக்கு ஆங்காங்கே வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வால்பாறை மக்கள் வன உயிரினங்களிடம் இருந்து காப்பாற்ற வனத்துறையின் அனைத்து ஒத்துழைப்பும் அழிக்கப்படும் என தலைமை வனப்பாதுகாவலர் ராஜீவ் கே ஸ்ரீ வஸ்தவா தெரிவித்துள்ளார்.