ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள சில இறைச்சி கடைகளில் இறந்த கோழிகள் மற்றும் சுகாதாரம் இல்லாத இறைச்சிகளை கடைக்காரகள் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனைமலை சுற்றுப்பகுதிகளான வேட்டைக்காரன்புதூர், கோட்டூர், நா.மூ.சுங்கம், ஆனைமலை போன்ற இடங்களில் அதிக அளவில் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகளில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் சில கடைக்காரகள் நோய் தாக்குதலுக்கு ஆளான கோழிகள், ஆடுகள் மற்றும் இறந்த ஆடுகள், கோழிகளை குறைந்து விலைக்கு வாங்கிவந்து கறியை பதப்படுத்தி விற்பனை செய்வதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் கூறும்போது, ""சுகாதாரம் இல்லாத இறைச்சி விற்பது பற்றி என்னிடம் எந்த புகாரும் வரவில்லை. ஆனைமலை வட்டார சுகாதார ஆய்வாளர் தான் இதற்கு பொறுப்பு. சுகாதாரம் இல்லாத கடைகள் பற்றி அவரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.