E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தமிழக அரசின் "அட்சய பாத்திரம்' திட்டம் * செயல்படுத்த முடியாமல் தவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜன
2013
01:48
பதிவு செய்த நாள்
ஜன 29,2013 18:33

பொள்ளாச்சி:அரசு பள்ளிகளில், செயல்படுத்த உத்தரவிடப்பட்ட "அட்சய பாத்திரம்' திட்டத்துக்கு, பாத்திரம் வழங்க நன்கொடையாளர்கள் கிடைக்காததால், ஆரம்ப நிலையிலேயே திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில், மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்ற தாழ்வுகளை நீக்கும் வகையில், தமிழக அரசு "அட்சய பாத்திரம்' திட்டம் அமல்படுத்த உத்தரவிட்டது. அனைத்து அரசு பள்ளிகளிலும், சத்துணவு மையத்திலோ அல்லது தலைமை ஆசிரியர் அறையிலோ ஒரு பாத்திரம் வைத்து, மாணவர்கள், அந்த பாத்திரத்தில், ரகசியமாக காய்கறி இடவும், மறுநாள் சமையலுக்கு இந்த காயை பயன்படுத்தவும் அரசு அறிவுறுத்தியிருந்தது.



இத்திட்டத்தை செயல்படுத்த பல பள்ளிகள், தயக்கம் காட்டியதால், அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் ஒன்றியங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, உதவி துவக்க கல்வி அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு பின் இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.



இத்திட்டத்தில், பெரிய அளவில் பானை போன்று "அட்சய பாத்திரம்' வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில், போதிய நிதி இல்லாவிட்டால், நன்கொடையாளர்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தலாம், என, தெரிவிக்கப்பட்டது.



இதனால், பல பள்ளிகளும் நன்கொடையாளர்களை தேடி வருகிறது. ஒரு சில பள்ளிகளில், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் நிதி உதவியுடன், பாத்திரம் வாங்கி இத்திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளனர்.



ஆனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு, நன்கொடையாளர்கள் கிடைக்காததால், திட்டத்தை செயல்படுத்த முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், மாணவர்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட திட்டம், ஆரம்ப நிலையிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.



ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் நினைத்தால், பணம் திரட்டி பாத்திரம் வைக்கலாம். ஆனால், பல பள்ளிகளில், இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்காததால், நன்கொடையாளர் கிடைக்கவில்லை, என, காரணம் கூறுகின்றனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில், இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி, கலவை சாதம் திட்டம் அமல்படுத்துவதற்குள், அட்சய பாத்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,' என்றனர்.




 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.