Advertisement
பொள்ளாச்சி தி.மு.க.,கோஷ்டி மோதல் முடிவுக்கு வந்தது * கைகுலுக்கி சமரசம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

30 ஜன
2013
01:47
பதிவு செய்த நாள்
ஜன 29,2013 18:34

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தி.மு.க.,வில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் தலைமைக்கழகத்தின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் தென்றல் செல்வராஜ். இவர் ஒரு அணியாகவும், பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர். தற்போது ராஜூ தி.மு.க.,வில் எந்த பதவியிலும் இல்லை. இவரது மகன் தமிழ்மணி பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.



இச்சூழலில், நேற்றுமுன்தினம் தி.மு.க., அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களை எதிர்கோஷ்டியினர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இப்பிரச்னை குறித்து தலைமை கழகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தலைமை கழகத்திடமிருந்து இரு தரப்பிடையே பேச்சு நடந்தது. அதன் பின்பு இரு தரப்பினரும் அமர்ந்து பொள்ளாச்சி கோவை ரோட்டிலுள்ள ஓட்டலில் பேச்சு நடத்தினர்.



அதில் இருகோஷ்டியினரும் சமாதானமாக ஒத்துப்போவதாக தெரிவித்ததையடுத்து, அவர்களுக்கு நகர செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூ விடம் அவர் சேர்த்த உறுப்பினர்களுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார். அதன் பின் இருவரும் கைகுலுக்கி சமரசமாயினர்.



இது குறித்து பொள்ளாச்சி நகர செயலாளர் செல்வராஜ் கூறியதாவது:



முன்னாள் எம்.எல்.ஏ., ராஜூவின் உறவினர் முன்னாள் சேர்மன் ராஜேஸ்வரி. அவரது மருமகள் சாமுண்டீஸ்வரி. இவர் தேர்தலின் போது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை 47(0) விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.



அது பற்றி, உறுப்பினர் அட்டை பெற வந்த நிகழ்ச்சியின் போது பேச்சு எழுந்தது. சிறு வாக்குவாதம் அதை பெரிதுபடுத்திவிட்டனர். எங்களுக்குள் எப்போதும் மனக்கசப்போ, பிணக்கோ ஏற்பட்டதில்லை; ஏற்படாது. நாங்கள் இணைந்து செயல்படுவோம்.



இவ்வாறு செல்வராஜ் கூறினார்.



 

மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.