தீ விபத்தில் இறந்த மூதாட்டியின் கணவருக்கு, கலெக்டர் கோவிந்தராஜ், இயற்கை இடர்பாடு நிதியாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பொதுமக்களிடம் குறைகேட்கும் முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சமூக நலத்துறை சார்பில், 17 திருங்கைகளுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், மண்ணரை அருகே தீ விபத்தில் பலியான மூதாட்டியின் கணவருக்கு, இயற்கை இடர்பாடு நிதியாக, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
திருப்பூர் தாலுகாவை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சம்பத், சமூக நலத்துறை அலுவலர் நாகபிரபா, துணை கலெக்டர் கோபெண்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.