சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர் வீணடிப்பு : கிருஷ்ணா கால்வாய் கரை கடும் சேதம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
21:51

செங்குன்றம் : சென்னையில், இந்த ஆண்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று, எதிர்பார்க்கப்படும் நிலையில், இடையூறு இல்லாமல் வந்துகொண்டு இருக்கும் கிருஷ்ணா நீரை அதிகாரிகள் வீணடித்து வருகின்றனர். இந்த நீரை புழல் ஏரிக்கு கொண்டுவரும் கால்வாய் பல இடங்களில் கடுமையாக
சேதமடைந்து உள்ளது. இதை சீர் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், கால்வாய் கரையில், சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, நீரும் வீணடிக்கப்படுகிறது. நிலை இப்படியே தொடர்ந்தால், கால்வாயை ஒட்டி உள்ள சில கிராமங்களில் கரைகள் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்
ஏற்படும்.2011ல்...கிருஷ்ணா கால்வாயின் சேதம் குறித்து, 2011ம் ஆண்டு ஜூன் மாதம் "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதையடுத்து, இந்த கால்வாயை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கால்வாயின் வளர்ந்திருந்த செடிகள் மற்றும் அடர்ந்த புதர்கள்; கரை சரிவால் ஆங்காங்கேஉருவாகியிருந்த மண் குவியல்கள்; கரை உடைப்பு மற்றும்
ஆக்கிரமிப்புகளை, அதிகாரிகள் கண்டறிந்தனர். அப்போது, இது பற்றி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் நஞ்சன் கூறுகையில், ""கால்வாய் கரையில் உள்ள மண் மேடு, குப்பை கழிவுகள் உள்ளிட்ட அடைப்புகள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்படும். கரை சேதங்களை சீரமைக்க 10 கோடி ரூபாய் கோரப்பட்டு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கி போர்க்கால அடிப்படையில் நடக்கும்,'' என்றார்.
மேலும்,""கால்வாய் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கால்வாய் பாதுகாப்பு குறித்து கண்காணிப்பும், பராமரிப்பும் தொடரும். இதனால் கிருஷ்ணா நீர் வரத்து சென்னைக்கு முழுமையாகவும், சுகாதாரமாகவும் கிடைக்கும்,'' என, உறுதி அளித்தார்.
துவக்கப்படவில்லை ஆனால், இன்று வரை, கால்வாய் மோசமாகத்தான் உள்ளது. ஆய்வு முடிந்து ஒன்றரை ஆண்டு களாகியும் சீரமைப்பு பணிகள் துவக்கப் படவில்லை. இந்த நிலையில், கடந்த 20ம் தேதி, கிருஷ்ணா குடிநீர் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில், 2012 - 13ம் ஆண்டில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவை தண்ணீர் மற்றும் 2013 - 14ம் ஆண்டிற்கான 12 டி.எம்.சி., தண்ணீர் உட்பட மொத்தம், 20 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு, ஆந்திரா வழங்க வேண்டும் என்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து, கிருஷ்ணா கால்வாய் வழியாக வினாடிக்கு, 150 கன அடி நீர் வரத்து உள்ளது. இந்த நீர் வரத்திற்கே கால்வாய் கரை, கரைந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது. தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, மே மாத்திற்கு பின், வினாடிக்கு 1,000 கன அடி வீதம் சென்னைக்கு நீர் வரத்து
இருக்கும். அதற்குள் கரை உறுதிப்படுத்தப் படாவிட்டால், வீணாகும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மழுப்பல் ஆந்திர எல்லையில் உள்ள கிருஷ்ணா கால்வாய் கரை
பகுதிகள் சீரமைக்கப் பட்டாலும், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள
கால்வாய் கரை சீரமைப்பில் சம்பந்தப்பட்ட துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, புழலேரிக்கு வந்து இணையும் கால்வாய் கரையில் ஆக்கிரமிப்புகள்
உடனடியாக அகற்றப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து, கிருஷ்ணா நீர் திட்டப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,""மேற்கண்ட பகுதியில் கால்வாய் சீரமைப்பு பணி விரைவில் துவங்க உள்ளது. பூண்டியில் இருந்து வரும் தண்ணீர் முழுமையாக கிடைக்கும். கோடையில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது,'' என்று வழக்கம் போல், பதில் அளித்தார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.