சென்னை : ஓட்டேரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கு, அரசின் மடிக்கணினிகளை முதலில் வழங்க வேண்டும் என, கோரி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், நேற்று
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டேரி, அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, முழுமையாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான, மடிக்கணினி களை வழங்கியது. இதை கண்டித்து, இறுதி யாண்டு மாணவர்கள்,
100க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர். முதலில் தங்களுக்கு கொடுத்து விட்டு, பின் இரண்டாமாண்டு மாணவர் களுக்கு கொடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.