சென்னை : சென்னை மாநகர பேருந்துகளில், கடந்த ஆண்டு, பயண சீட்டின்றி பயணம் செய்த நபர்களிடம் இருந்து, 52 லட்சம் ரூபாய் அபராதமாகவசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழகஅதிகாரி கூறியதாவது:மாநகர பேருந்துகளில், "வித்-அவுட்'ல் பயணிக்கும் நபர்களால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, பயணச்சீட்டு பரிசோதகர்கள்
எண்ணிக்கையை, 200 ஆக அதிகரித்து உள்ளோம்.காணும்
பொங்கல் பண்டிகை அன்று, பயண சீட்டின்றி பயணம் செய்த, 3,000 பேரிடம்
இருந்து, 1.62 லட்சம் ரூபாய், அபராத மாக வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டு
மட்டும்,பயணச்சீட்டின்றி பயணம் செய்த நபர்களிடம் இருந்து, 52 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.