அழகிரியை ஆதரித்து போஸ்டர் ஒட்டியவர்களுக்கு தி.மு.க.,எச்சரிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:32

மத்திய அமைச்சர், அழகிரியின் பிறந்த தினத்தையொட்டி, அவரை துதிபாடும் வகையிலும், தி.மு.க., பொரு ளாளர் ஸ்டாலினை, மறைமுகமாக விமர்சிக்கும், "பஞ்ச்' வசனங்களுடன் கூடிய போஸ்டர்கள், சென் னை உள்ளிட்ட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
"இந்த போஸ்டர்கள் மூலமாக, கட்சியில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அழகிரிக்கு பிறந்த நாள் பரிசாக, இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியானதால், அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான அழகிரியின், 62வது பிறந்த தின விழா, இன்று மதுரையில் கொண்டாடப்படுகிறது.
சென்னை நகரில், அழகிரியின் புகழ் பாடும் வகையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையிலும், விதவிதமான போஸ் டர்கள், "பஞ்ச்' வசனங்களுடன் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்த போஸ்டர்கள், கோபாலபுரம், சி.ஐ.டி., காலனி இல்லம், அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில், அதிகமாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களில் காணப்படும் வாசகங்கள், பொரு ளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாசகம், தி.மு.க., தலைமைக்கும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
"தனி மனிதன் புகழ் பாடும் வகையில், கட்சியை மறைமுகமாக, கிண்டலடிக்கும் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கட்சி தலைமையிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதன் அடிப்படையில், "கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தி.மு.க., தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
அழகிரியின் பிறந்ததினத்தை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக் கூறுவதாகக் காட்டிக் கொண்டு, கட்சிக்கு அவப்பெயரும், இழுக்கும் ஏற்படுத்தும் வகையில், தவறான வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் சென்னையில் காணப்படுகின்றன.
அந்தச் சுவரொட்டிகளை, அச்சிட்டு ஒட்டியவர்கள் என, காணப்படும் பெயர்கள், கட்சியில், எந்தக் கிளை உறுப்பினர்கள் என்று தெரியவில்லை. கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று, தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கட்சிக்கு இழுக்கு ஏற்படுத்துவோர் எவராயினும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அழகிரியின் பிறந்த தின விழா, இன்று கொண்டாடப்படும் நிலையில், பிறந்த தின பரிசாக, தலை மை அலுவலகம் விடுத்துள்ள எச்சரிக்கை, அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில், கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.
இதற்கிடையே, கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம், அறிவாலயம் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள், தி.மு.க., தொண்டர்கள் மூலமாக, நேற்று மாலை அதிரடியாக கிழித்து எறியப்பட்டன.
அழகிரியின் ஆதரவாளர் ரமணா பெயரில், இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
"நடப்பது ராம நாடகமே'
அதில், "இங்கே பரமசிவனும் இல்லை, நாங்கள் கருடனும் இல்லை. நடப்பது ராம நாடகமே' என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது:
பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு, கருடனைப் பார்த்து, "சவுக்கியமா?' எனக் கேட்கும். அதே போல், கருணாநிதியால் தலைமைப் பதவிக்கு வழிமொழியப்பட்டுள்ள ஸ்டாலினை, பரமசிவன் கழுத்து பாம்பு போலவும், அழகிரியை கருடன் போலவும் உருவகித்து இந்த வாசகம் உருவாக்கப்பட்டது.
கருணாநிதி ஒன்றும் பரமசிவனும் இல்லை; அழகிரி கருடனும் இல்லை என்ற வாசகங்கள், ஸ்டாலின் ஆதரவாளர்களை கோபப்படுத்தும் நோக்கோடு குறிப்பிடப்பட்டு உள்ளன.
அதே போல், ராமாயணத்தில், அண்ணன் ராமனை, வனவாசம் அனுப்பி விட்டு, தம்பி பரதனுக்கு முடி சூட்டிய விவகாரம் குறித்து, "நடப்பது ராம நாடகமே' என்ற வாசகம் மூலம் மறைமுகமாகக் கூறப்பட்டு உள்ளது.
மற்றொரு போஸ் டரில், "கண்ணகியின் சிலம்பும், மனோகரனின் விலங்கும், விழுந்ததா, வீழ்த்தியதா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கருணாநிதி வசனம் எழுதிய, "பூம்புகார், மனோகரா' படங்களை ஞாபகப்படுத்தி, நியாயம் கேட்கும் போஸ்டராக இது ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.