E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சமச்சீர் கல்வி திட்டம் வந்த பின் மெட்ரிக் இயக்குனரகம் தேவையா?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜன
2013
23:32

மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தி யுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாகஇயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது. மெட்ரிக் இயக்குனரகத்தின் கீழ், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பழைய பெயர் எதற்கு? புதிய பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்குவது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளிகளுக்கு, அங்கீகாரத்தைப்புதுப்பித்து வழங்குதல், பள்ளிகளின் நிர்வாகங்களைகண்காணித்தல் உள்ளிட்டபணிகளை, இயக்குனரகம்கவனித்து வருகிறது.
சென்னையில் உள்ள, இயக்குனர் அலுவலகம் மற்றும் 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் சேர்த்து, 70 பேர், பணியாற்றி வருகின்றனர். நான்கு வகையான கல்வி
திட்டங்களை ஒருங்கிணைத்து, பொது பாடத் திட்டம் உருவாக்கி, அமல்படுத்தப் பட்டுள்ளது.
எனினும், தனியார் பள்ளிகளுக்கு, இன்னும், "மெட்ரிகுலேஷன்' என்ற பெயர் இருந்து வருகிறது. இந்த பெயரை மாற்றுவது குறித்து, தமிழக அரசு, எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
"விதிமுறைகள் பழையதே'
மேலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குனரகம் இயங்குவது, தேவையற்ற நிர்வாகச் செலவை ஏற்படுத்தும் என்றும், இந்த இயக்குனர் அலுவலகத்தை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துடன் இணைத்து விடலாம் என்றும்,தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரத்தினர் கூறியதாவது:
பாடத் திட்டங்கள் மட்டும் பொதுவானதாக மாற்றப்பட்டு உள்ளன. ஆனால், நான்கு விதமான கல்வி திட்டங்களுக்கான சட்ட விதிமுறைகள், அப்படியே உள்ளன.மாநில பாடத் திட்டம்,
ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய, மூன்று கல்வி முறைகளுக்கான நிர்வாகம், பள்ளி கல்வித்துறையின் கீழ் இருக்கிறது. நர்சரி பள்ளிகளுக்கான நிர்வாக கட்டுப்பாடு, தொடக்க கல்வித் துறையிடம் உள்ளது. அனைத்து நிர்வாகப் பணிகளையும், ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் எனில், முதலில் அதற்கான சட்ட விதிமுறைகளை நீக்கி விட்டு, பொதுவான சட்ட விதிமுறைகளை கொண்டு வர வேண்டும். இதை எல்லாம், அரசு தான் செய்ய வேண்டும்.
"பணிச்சுமை அதிகரிக்கும்'இதை எதுவும் செய்யாமல், இயக்குனரகத்தை மட்டும், வேறொரு துறையுடன் இணைக்க முடியாது. ஏற்கனவே, பெரும் பணிச்சுமையுடன் இயங்கி வரும், பள்ளிக் கல்வி துறையிடம், தனியார் பள்ளிகளையும் ஒப்படைத்தால், மேலும் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பல்வேறு நிர்வாக குழப்பங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, கல்வித் துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர். தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எடுத்து விட்டு, தனியார் பள்ளிகளுக்கான இயக்குனரகம் என, அமைக்கலாம். இந்த நிர்வாகத்தை, பள்ளிக் கல்வியுடன் இணைத்தால், நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். தனியார் பள்ளிகளுக்கு, பெரும் பிரச்னைகள் ஏற்படும். "நிரப்பப்படுமா?' நிர்வாக வசதிக்காகவும், பள்ளிகளை முறையாக கண்காணிக்கவும் தான், தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிர்வாக முறையில், சில குறைகள் உள்ளன. குறிப்பாக, 15 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவர்களால், தனியார் பள்ளிகளை, சரிவர கண்காணிக்க முடியவில்லை. அனைத்து காலி பணியிடங்களை நிரப்பியும், நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்த, உரிய நடவடிக்கை எடுத்தாலே போதும். இவ்வாறு, நந்தகுமார்
கூறினார்.

- நமது நிருபர் -

 

மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.