சென்னை : குப்பை அகற்றுவதில் தெரு வரைபட பயன்பாடு, பொறுப்பாளர்களின் அலைபேசி எண்களை எழுதி வைக்கும் நடைமுறையை, மாநகராட்சி மீண்டும் அமல்படுத்தி உள்ளது.
சென்னையில், குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், முன்பு ஆணையராக இருந்த டேவிதார், சிறப்பு கவனம் செலுத்தினார். இதற்காக, கடந்தாண்டு ஜனவரியில், புதிய நடைமுறையை கொண்டு வந்தார்.டூ அதன்படி, 200 வார்டுகளிலும் தெருக்களின் வரைபடங்கள், தெருக்களுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
டூ
குப்பை அகற்ற வண்டி வருவது முதல் கிடங்குக்கு செல்வது வரை, தெரு
பொறுப்பாளர் முதல், மூன்று கட்டங்களாக, அலைபேசி குறுஞ்செய்தி மூலம்,
தகவல்களை மாநகராட்சிக்கு அனுப்பும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.கைவிடப்பட்ட இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதில் மாநகராட்சி ஆர்வம் காட்டி வருகிறது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக,
தெரு வாரியாக வரைபடத்தை பயன்படுத்துதல், குப்பை அகற்றும் பொறுப்பாளர்களின்
எண்களை, எழுதி வைப்பது ஆகியன, அனைத்து வார்டுகளிலும் நடைமுறைக்கு
வந்துள்ளன. அடுத்த கட்டமாக, அலைபேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் நடைமுறை,
விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இது குறித்து, தனியார் நிறுவனங்களுடன்
ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.