கடலூர் : ""கடந்த ஒன்னரை ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் 7 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு
128 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது'' என அமைச்சர் செல்ல பாண்டியன் பேசினார்.
தமிழ்நாடு
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின்
உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூரில் நேற்று
நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழழகன்
எம்.எல்.ஏ., சேர்மன் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். கூடுதல் தொழிலாளர்
ஆணையர் சோம்புராஜன் வரவேற்றார்.
நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட
உதவிகள் வழங்கி அமைச்சர் சம்பத் பேசுகையில், "இந்த விழாவில் 2,250
பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் 73 லட்சத்து 53 ஆயிரத்து 900
ரூபாய் உதவித்தொகை வழங்கப்படு
கிறது.
எனவே அனைவரும் இதில் உறுப்பினர்களாக சேர வேண்டும். இதன் மூலம் கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது' என்றார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்ல பாண்டியன் உதவித்தொகை வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில்
92 சதவீதம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். கட்டுமான தொழிலாளர்,
உடலுழைப்புத்தொழிலாளர் போன்ற 17 நலவாரியங்கள் உள்ளன. கடந்த தி.மு.க.,
ஆட்சியில் 33 லட்சத்து 11 ஆயிரத்து 226 பேர் பதிவு செய்தனர். அவர்களில் 12
லட்சத்து 54 ஆயிரத்து 877 பேர்க்கு 319 கோடியே 18 லட்சம் ரூபாய் உதவி
வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆட்சியில் கடந்த ஒன்னரை ஆண்டில் 5
லட்சத்து 67 பேர் பதிவு செய்ததில் 7 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு 128கோடியே
36 லட்சம் ரூபாய்க்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பதிவு
செய்ததை விட கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றால் கடந்த கால ஆட்சியில் பதிவு
செய்தவர்களுக்கும் தற்போது உதவிகள் வழங்கப்பட்டுள்ளதையும் பார்க்க
வேண்டும்.
அதுமட்டுமல்ல கடந்த 2001-2006ம் ஆண்டில் மின்சார பிரச்னை
இல்லை. அவர்கள் 3 தவறுகளை செய்துள்ளனர். மின் உற்பத்தியை உருவாக்கவில்லை.
உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவில்லை. வழித்தடங்கள் அமைக்க புரிந்துணர்வு
ஒப்பந்தம் போடவில்லை. இதன் காரணமாகத்தான் இன்று இந்த அளவுக்கு மின்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களில் இருந்து தருவதாகக்
கூறிய மின்சாரத்தைக் கூட மத்திய அரசு வழித்தடம் கொடுக்காமலும், காவிரித்
தண்ணீர் கொடுக்க உத்தரவிடாமலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
இவ்வாறு செல்ல பாண்டியன் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்க உங்க சொந்த விருப்பு வெறுப்ப மத்திய அரசிடம் கட்டாமல் தமிழ்நாட்டு மக்களை பற்றி கொஞ்சம் சிந்தித்து பார்க்கவும் .சும்மா எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டி உங்கள் கடமைல் இருந்து தப்பிக வேண்டாம் .ஒரு வேலை இப்டி சொன்ன தன உங்கள பார்லிமென்ட் election கு ஒட்டு போட்டு அனுபிவைபோம்னு .இப்படி தொடர்ந்து குற்றம் சட்டபடுகிறத்..என்னவோ மக்கள் பாவம்.