காரைக்கால் : காரைக்கால்
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) அடிப்படை வசதி செய்ய கோரி
மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இந்திய
அளவில் 2010-11ம் கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட 10 தேசிய தொழில்நுட்ப
நிறுவனம் என்.ஐ.டி.,களில் ஒன்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில்
துவக்கப்பட்டது.கல்லூரிக்கான கட்டடத்திற்கு 2010ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி
மத்திய அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.
காரைக்கால் என்.ஐ.டி.யில்,
கம்ப்யூட்டர் சயின்ஸ், எலட்ரிக்கல் அண்டு எலட்ரானிக்ஸ், எலட்ரிக்கல் அண்டு
கம்யூனிகேஷன் பிரிவுகளில் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
அகில
இந்திய அள வில் நடக்கும் என்.ஐ. டி.,க்கான நுழைவு தேர்வில் வெற்றி பெற்று
அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு என்.ஐ.டி.யில் இடம் கிடைக்கும்.
காரைக்கால் என்.ஐ.டி., அண்ணா அரசு கலைக் கல்லூரியின் 4 வகுப்பறைகளில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
என்.ஐ.டி.க்கான நிலம் கையகப்படுத்தி அரசு வழங்கிய பின்பும், கட்டுமான பணிகள் துவக்கப்படாமல் கிடக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் என்.ஐ.டி. வகுப்புகள் இயங்கி வருகிறது.
கல்லூரியில்
வகுப்பறைகள் பற்றாக்குறை, நூலகத்தில் போதிய அளவிலான புத்தகங்கள் இல்லை,
சுத்தமான கழிவறைகள் இல்லை, கம்யூட்டர் லேப், மாணவர்கள் அமர்ந்து சாப்பிட
இடமில்லை, வகுப்புறைகளில் போதிய விளக்கு, இருக்கைகள் இல்லை உள்ளிட்ட பல
கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.