புதுச்சேரி : தென்னிந்திய அளவிலான குதிரையேற்றப் போட்டி, வரும் 1ம் தேதி, ஆரோவில்லில் துவங்குகிறது.
ஆரோவில் ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளி நிர்வாகி ஜாக்குலின் நிருபர்களிடம் கூறியதாவது:
தென்னிந்திய அளவிலான 13வது குதிரையேற்ற போட்டி ஆரோவில்லில், வரும் பிப்ரவரி 1ம் தேதி மாலை துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது.
போட்டிகள் காலை 6 மணியிலிருந்து 10 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரையிலும் நடக்கிறது.
போட்டியில்
250 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தென் மாநிலங்களில் இருந்து நூறு
குதிரைகளும், ஆரோவில் ரெட் எர்த் பள்ளியிலிருந்து 20 குதிரைகளும்
பங்கேற்கின்றன.
தேசிய சாம்பியன்கள் நிதின்குப்தா, அஜய்அப்பச்சு உள்ளிட்ட பல முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.
போட்டிகள்,
12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 12-14 வயதிற்குட்பட்டோர், 17
வயதிற்குட்டோர், 22 வயதிற்குட்பட்டோர் மற்றும் 22 வயதிற்கு மேற்பட்டவர்கள்
என பல்வேறு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
குழுப் போட்டியில் சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரி சார்பிலும் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
போட்டியில்
முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 3ம் தேதி மாலை பேஷன் ஷோ நடக்கிறது. உலக
அளவில் பிரசித்திப் பெற்ற பேஷன் டிசைனர்கள், மாடல்கள் பங்கேற்கின்றனர்.
குதிரையேற்ற ஆர்வத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்த இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.இவ்வாறு ஜாக்குலின் கூறினார்.