புதுச்சேரி : பஞ்சாப்
மாநிலத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி
முத்திரையர்பாளையம் பாரதிதாசன் ஆங்கில உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு பள்ளி
வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்
பள்ளிகளுக்கான 58வது தேசிய விளையாட்டுப் போட்டி நடந்தது. இப்போட்டியில்,
முத்தரையர்பாளையத்தில் உள்ள பாரதிதாசன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 10ம்
வகுப்பு மாணவர் சந்தோஷ்குமரன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவருக்குப் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் குருநாதன் தலைமை தாங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் கந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர் சந்தோஷ்குமாரை பாராட்டினர்.