புதுச்சேரி : மொரட்டாண்டி டோல்கேட் அருகே சத்திய ஞான சபையில் ஆன்மிகப் பாடசாலை திறப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.
புதுச்சேரி
அடுத்துள்ள மொரட்டாண்டி டோல்கேட் அருகே பாரத மாதா நகரில் அமைந்துள்ள
சத்திய ஞான சபையில் நன்னீராட்டு விழா மற்றும் தர்மச்சாலை ஆன்மிகப்பாடசாலை
திறப்பு விழா நேற்று நடந்தது. அருட்பா அருணாசலம் முன்னிலை வகித்தார். சிவ
தனநடராஜன் ஞானதீபம் ஏற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
விழாவையொட்டி
நேற்று காலை 6 மணியளவில் சத்திய ஞானசபையில் அமுத நன்னீராட்டு விழா, டாக்டர்
தன கஜபதி முன்னிலையில் நடந்தது. மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலைய
சுவாமிகள், சத்திய தர்மச்சாலை வள்ளலார் சிலையை திறந்து, ஆசியுரை
வழங்கினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சத்திய ஞான சபையின் பெயர்
பலகையைத் திறந்து வைத்து, வாழ்த்துரை வழங்கினார். விழாவையொட்டி
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், வானூர் எம்.எல்.ஏ.,
ஜானகிராமன், மாவட்ட கவுன்சிலர் பக்தவச்சலம், வானூர் ஒன்றிய சேர்மன் சிவா,
முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி, திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் லலிதா,
ஒன்றிய கவுன்சிலர் கவுரி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.