புதுச்சேரி : நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி 2வது முறையாக சிறந்த பள்ளிக்கான விருதினைப் பெற்றுள்ளது. புதுச்சேரி
முத்தியால்பேட்டையில் உள்ள நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளி கடந்த 10
ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று
வருகிறது. கடந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத
தேர்ச்சி பெற்றது.
இதற்காக உப்பளம் மைதானத்தில் நடந்த குடியரசு தின
விழாவில் இரண்டாவது முறையாக கவர்னர் இக்பால்சிங்கிடம் சிறந்த பள்ளிக்கான
முதலமைச்சர் விருதினைப் பெற்றது.
இந்த விருதை கவர்னரிடமிருந்து பள்ளி முதல்வர் கிரிஷ்குமார் பெற்றுக் கொண்டார்.
இப்பள்ளி
2011-2012ம் கல்வியாண்டில் தேசிய விருது, இன்ஸ்பயர் விருது, 2012-2013ம்
கல்வியாண்டில் ஐந்து மண்டல விருதுகள், மத்திய புதுப்பிக்கவல்ல எரிசக்தி
அமைச்சகம் நடத்திய அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் ஆறுதல்
பரிசினையும் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்.