புதுச்சேரி : ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு, குடியரசு தின விழாவில் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. ஆலங்குப்பம்
அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த 2011-12ம் ஆண்டில் கல்வி மற்றும் கல்வி சாரா
செயல் பாடுகளில் சிறந்து விளங்கியது. இதற்காக பேராசிரியர் அம்பாடி நாராயணன்
சுழற்கோப்பைக்கு, இப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
இந்திராகாந்தி
விளையாட்டு அரங்கில் நடந்த குடியரசு தினவிழாவில், சுழற்கோப்பையை, கவர்னர்
இக்பால் சிங் வழங்க, ஆலங்குப்பம் பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி
பெற்றுக் கொண்டார்.
சுழற்கேடயம் பெற துணையாக இருந்த தலைமையாசிரியர்,
பசுமைப்படை, சமுதாய நலப்பணித் திட்ட ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய
மற்றும் மாணவர் நுகர்வோர் மன்ற ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து
ஆசிரியர்களுக்கும், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் நன்றியும்,
பாராட்டையும் பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.