Advertisement
108 ஆம்புலன்ஸில் பணிபுரிய நேர்காணல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜனவரி 31,2013,19:22 IST

திருப்பூர்:பிறந்தது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 108 பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவையைஇ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் துவக்குகிறது. அதற்கான பணியாளர்கள் தேர்வு நேர் காணல் காங்கயத்தில் வரும் 4ம் தேதி நடக்கிறது.
குழந்தைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸில், "இன்குபேட்டர்', குழந்தைகளுக்கு செலுத்தும் சிறிய அளவிலான ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை, ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய கருவிகள் இடம் பெற்றுள்ளன. முதற்கட்டமாக, தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பரிசோதனை முறையில் இந்த ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டும் வருகிறது. தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் முதல் இயக்கப்படுகிறது.
இதற்கான, ஆட்கள் தேர்வு பணி மாவட்டம் வாரியாக நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான நேர்காணல் வரும் 4ம் தேதி காங்கயம், சேரன் பெண்கள் கல்லூரியில் காலை 10.00 மணிக்கு நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சென்னையில் உள்ள 108 தலைமை அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாதாவர்கள்; மூன்று ஆண்டு ஓட்டுனர் அனுபவம் வாய்ந்தவர்கள்; கனரக வாகனங்களுக்கான லைசன்ஸ் வைத்துள்ள, டிரைவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
பி.எஸ்ஸி, "டிப்ளமோ இன் நர்சிங்' சார்ந்த பாடப்பிரிவுகளை முடித்தவர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, 22 முதல் 32 வரை. நேரடியாக வருபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். நேர்காணலுக்கு வருபவர்கள் அசல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.



 

மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள்:
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.