திருப்பூர்:குடியரசு தினத்தன்ற செயல்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினம்; தேசிய விடுமுறையான அன்று, அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விடுமுறை தினத்தில் செயல்படும் நிறுவனங்கள், பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த விவரங்களை ஒரு நாளைக்கு முன்னதாக, தொழிலாளர் ஆய்வாளர்களிடம் வழங்க வேண்டும்.
குடியரசு தினத்தன்று பணிபுரியும் தொழிலாளர் குறித்து, ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில், துணை உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். ஆய்வில், விடுமுறை தினத்தில் செயல்பட்ட, இரண்டு மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 25 கடைகள்; 51 உணவு விடுதிகள் என, மொத்தம் 78 நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.