டூவீலர் ஸ்டாண்டில் கட்டண கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 பிப்
2013
03:50
பதிவு செய்த நாள்
ஜன 31,2013 19:25

திருப்பூர்: "பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தனியார் டூவீலர் ஸ்டாண்ட்டுகளில் வாகனம் நிறுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது; கலெக்டர் தலையீட்டு தீர்வு காண வேண்டும்' என, காங்கயம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் வட்டார பகுதிகளான வரதம்மாள்நகர், ஆலம்பாடி, கம்பளியாம்பட்டி, ஊதியூர், சோலையப்பபாளையம், காடையூர், கன்னேரிபாளையம், சிவன்மலை, நால்ரோடு, பாப்பினி உட்பட பல பகுதிகளிலிருந்து, திருப்பூருக்கு தினமும் 500 முதல் 750 தொழிலாளர்கள் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்கின்றனர்.
டூவீலரில் வருபவர்கள் வண்டியை பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள டூ வீலர் ஸ்டாண்ட்டில் நிறுத்திவிட்டு திருப்பூருக்கு செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தப்படும் வண்டிகளுக்கு நகராட்சி ஸ்டாண்ட்டுகளில் வாங்கப்படுவதை விட அதிக அளவு கட்டணத்தை தனியார் ஸ்டாண்டுகள் வசூல் செய்வதாக, தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: காங்கயம் நகராட்சி ஸ்டாண்ட்டில் இடபற்றாக்குறை ஏற்படுவதால், தனியார் ஸ்டாண்டுக்கு செல்கிறோம்; ஒரு நாளைக்கு எட்டு ரூபாய் வசூலிக்கின்றனர். தொழில் நகரான திருப்பூரிலுள்ள ஸ்டாண்ட்டுகளில், நாளைக்கு ஐந்து ரூபாய். ஆனால், காங்கயத்தில் மூன்று ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றனர். காங்கயத்தில் இருந்து திருப்பூர் செல்ல பஸ் கட்டணம் பத்து ரூபாய்; கூடுதலாக, எட்டு ரூபாய் தினமும் சேருவதால், மாத பட்ஜெட்டில், இதற்கென ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது.
அதிக கட்டண வசூல் குறித்து, கலெக்டரிடம் மனு கொடுத்தோம். நேரில் ஆய்வு செய்த கலெக்டர், லைசன்ஸ் இல்லாமல் இயங்கும் ஸ்டாண்டுகளுக்கு எச்சரிக்கை விட்டார்; கட்டணத்தை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கவும், என உத்தரவிட்டார். ஓரிரு நாட்கள் மட்டுமே பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை, இப்போது இல்லை. கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும், என்றனர். 

Advertisement


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
01-பிப்-201316:23:10 IST Report Abuse
dori dori domakku dori எல்லாம் வெள்ளை அப்பன் திருவிளையாடல் . சபாபதி சாரங்கபாணி நினைவுக்கு வருகிறார்
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
01-பிப்-201310:56:55 IST Report Abuse
Jegan அதாவது மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அல்லது பொது இடத்தில் உள்ள வண்டிநிருத்துமிடத்திற்கு 5 ரூபாய் ஏன் என்று கேட்கவில்லை. தனியார் தன சொந்த இடத்தில் வைத்துள்ள வண்டிநிருத்துமிடத்திற்கு 3 ரூபாய் அதிகமாக வசூலிப்பது ஏன் என்று கேட்கிறார்கள். நான் ஒருமுறை கோயம்பேடு CMPT வண்டிநிருத்துமிடத்தில் ஒரு பிரச்சினைக்காக புகார் சொல்ல காவல் நிலையத்தை அணுகிய பொது, அவர்கள் சொன்ன பதில் "கோடிகணக்கில் பணம் செலவு செய்து டெண்டர் எடுத்து உள்ளார்கள். அவர்களிடம் பிரச்சினை பண்ணாதே. நீயாக இருந்தாலும் அப்படிதான் செய்வாய்". என்னால் அப்போது கேட்க முடியாமல் போன கேள்வி "ஏன் கோடிக்கணக்கில் செலவு செய்து குத்தகைக்கு எடுக்கணும் அவர்கள்?" ஆட்ட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் : "பணம் வருகிறதே என்றும் நம் கட்சிக்காரன் என்றும் வரம்புக்கு மீறி கட்டணம் விதிக்க கூடாது." மக்கள் கவனக்க வேண்டியது : "ஒட்டு போட கிடைக்கும் இலவசங்களை விட இந்த மாதிரி அதிகப்படியான கட்டணங்களில் நாம் இழப்பது அதிகம்." எனவே நகராட்சி ஏன் ஐந்து ரூபாய் வசூலிக்கனும். அதுவே அதிகம். சரியான நிழற்குடை இருக்காது. காசு வாங்க மட்டும் ஒரு அன்னக்காவடி நிற்பான். வேறு என்ன செலவு உள்ளது வண்டிநிருத்தும் இடங்களில்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.