மயிலாப்பூர் : மயிலாப்பூரில், ரேஷன் கடை, பள்ளிக்கூடம், மின்சார அலுவலகம் அருகே, "டாஸ்மாக்' கடைகள் இருப்பதால், பள்ளி மாணவர்கள், பெண்கள், கடும்
சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
டூ மயிலாப்பூர் தெப்பக்குளம் எதிரில், ரேஷன் கடையை ஒட்டி, "டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு வரும், "குடி'மகன்கள், குடித்து விட்டு, அரைகுறை உடையில், ரேஷன் கடை முன், படுத்து விடுகின்றனர். இதனால், ரேஷன் பொருள் வாங்க வரும் பெண்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
டூ காரணீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள, பெ.சு. உயர்நிலைப்பள்ளியில் இருந்து, 30 மீ., தூரத்தில், "டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு மது அருந்துவோர், பள்ளி மாணவியரை கேலி செய்வது, ரகளையில் ஈடுபடுவது உள்ளிட்ட, செயல்களில் ஈடுபடுகின்றனர்.
டூ கனால் பங்க் தெருவில், மின்வாரிய அலுவலகத்தின் அருகிலேயே ஒரு, "டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு, குடிமையம் இல்லாததால், "குடி'மகன்கள், சாலையை திறந்தவெளி குடிமையமாக மாற்றிஉள்ளனர்.
இதனால், இந்த
சாலையில் செல்லும், பள்ளி மாணவர்கள், மின்கட்டணம் செலுத்த வரும் பெண்கள், மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த மூன்று கடைகளையுமே, அந்தந்த பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.