சென்னை : வண்ணாரப்பேட்டையில்,
மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பதுக்கிய, 1,100 கிலோ ரேஷன் அரிசியை, குடிமை
பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் நிலைய பணியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.
இவர்களில்,
150 பேர் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில்
தங்கியுள்ளனர். அங்கு ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டதாக, குடிமை பொருள்
வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராயபுரம்
குடிமை பொருள் உதவி ஆணையர் பொன்னுசாமி நேற்று, திருமண மண்டபத்திற்கு சென்று
சோதனையிட்டார். சோதனையில், மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 1,100 கிலோ
ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.