மீனம்பாக்கம் : கல்குவாரியில் தேங்கிய குட்டையில், மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
மீனம்பாக்கம்,
டி.சி.கே., காலனி பின்புறம், கல்குவாரி ஒன்று உள்ளது. அங்கு தேங்கி இருந்த
நீரில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் மிதந்தது. கரையில், அவரது
உடை, செருப்பு இருந்தன.
தகவலையடுத்து, திரிசூலம் கிராம நிர்வாக அதிகாரி
ராதா, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், உடலை
மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் பெயர், முகவரி
தெரிய வில்லை.
போதையில், குளிக்கும்போது இறந்தாரா அல்லது மர்ம நபர்கள் நீரில் மூழ்கடித்து கொன்றனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.