சென்னை : ஆவின் மின்னணு பால் அட்டைக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை ஆவின் நிர்வாகம், சென்னை முழுவதும் விரிவுபடுத்தியுள்ளது.
சென்னையில்,
12 லட்சம் ஆவின் பால் அட்டைதாரர்கள் உள்ளனர். போலி ஆவின் அட்டைகளை ஒழிக்க,
ஆவின் நிர்வாகம் மின்னணு பால் அட்டையை அறிமுகப்படுத்தியது.
முதல்
கட்டமாக அண்ணா நகரில், மின்னணு பால் அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது, இந்த
சேவையை சென்னை முழுவதும் ஆவின் நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது.
www. aavinmilk.comஎன்ற ஆவின் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போதே,
மின்னணு அட்டையையும் வழங்க, ஆவின் நிர்வாகம் முடிவு
செய்துள்ளது.
இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த
இரண்டு மாதங்களில் விண்ணப்பித்தோரில், 2,000 பேருக்கு புதிய மின்னணு அட்டை
வழங்கப்பட உள்ளது. இனி, சென்னையில் உள்ள அனைத்து ஆவின் அட்டைதாரர்களும்,
புதிதாக விண்ணப்பிப்போரும் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு
புதிய அட்டைக்கான பதிவு எண், மின் அஞ்சல் (இ - மெயில்) மூலமாக
அனுப்பப்படும். அந்த பதிவு ரசீதை படிநகல் எடுத்து, அருகில் உள்ள ஆவின்
அலுவலகத்தில் கொடுத்து, ஆவின் அட்டைகளை பெற்று
கொள்ளலாம்.
அதன்
பின்னர், இணையதளத்திலேயே மாத வாடகை செலுத்தி புதுப்பித்து கொள்ளலாம்.
அதிகபட்சம், 20 நாட்களில் புதிய மின்னணு பால் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.