சென்னை : சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். வெங்கட்ராமன் நூற்றாண்டு விழா, நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது.
சென்னை
மயிலை பாரதிய வித்யா பவன் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இவ்விழாவில்,
நீதிபதிகள் டி.எஸ்.அருணாசலம், எஸ்.மோகன் உட்பட, பலர் பங்கேற்று அவரது
பெருமையை பேச உள்ளனர்.
கடந்த, 1961 முதல் 14 ஆண்டுகள், சென்னை
ஐகோர்ட்டில் பணியாற்றிய நீதிபதி கே.எஸ். வெங்கட்ராமன், சிவில், கிரிமினல்,
அரசமைப்பு சட்டம் என, பல சட்ட துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.
சட்டத்துறையில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
தனிப்பட்ட
வாழ்வில், தன் இஷ்ட தெய்வம் நடராச பெருமானை போற்றியவர். சுவாமி
விவேகானந்தர் மீது அன்பு கொண்டவர். பகவான் ரமண மகரிஷியிடமும், காஞ்சி
மாமுனிவர் பரமாச்சாரியார் மீதும், பாசமும், பக்தியும் கொண்டவர். கர்நாடக
இசையில் ஆர்வம் கொண்ட அவர், அத்துறையின் கலைஞர்களை ஆர்வத்துடன் ஆதரித்தவர்.
துவக்க
கல்வியை சென்னையில் துவக்கிய அவர், கணக்கு பாடத்தில் "ஹானர்ஸ்' பட்டம்
பெற்று, பின் லண்டனில் ஐ.சி.எஸ்., தேர்வில் மூன்றாவது ரேங்க் எடுத்து,
1934ல் இந்திய மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
முதலில் மதுரையில்
நீதிபதியாக சேர்ந்து, பின் சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி,
அத்துறையில் தன் தலைமைப் பண்பை, அனைவருக்கும் உணர்த்தியவர்.
சங்கீத நாடக
அகாடமியின் தலைவராக இருந்த, அவரது நூற்றாண்டு விழாவை, அவரது புதல்வர்
வி.சீனிவாசனும், இசைக்கலைஞர் சுலோசனாவும்,மயிலையில் சிறப்பாக நடத்த
ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.