Advertisement
மணலியில் லாரி மோதி சிறுமி பலி பகுதி வாசிகள் சாலை மறியல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

01 பிப்
2013
01:36

சென்னை : மணலியில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், சிறுமி ஒருவர் பரிதாபமாக இறந்தார். இப்பகுதியில் ஏற்படும் தொடர் விபத்தை கண்டித்து, பகுதி வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணலி, சின்னசேக்காடு கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர்கள் யுவராஜ் - சலோமி தம்பதியர். இவர்களுக்கு, 3ம் வகுப்பு படிக்கும், ரோடா ஸ்வீட்டி, 8, என்ற, பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து திரும்பிய ஸ்வீட்டியை, இருசக்கர வாகனத்தில், யுவராஜ் அழைத்து வந்தார். சலோமியும் உடனிருந்தார். மணலி சின்னசேக்காடு, பார்த்தசாரதி கோவில் தெரு வழியாக சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் கீழே விழுந்து, தலையில் பலத்த காயம் அடைந்த ஸ்வீட்டி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தாள். யுவராஜூம், சலோமியும், காயங்களுடன் உயிர் தப்பினர். லாரி ஓட்டுனரான, ஆலங்குளத்தை சேர்ந்த கருப்பசாமியை, 23, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
பார்த்தசாரதி கோவில் தெருவில் அதிகரித்து வரும் லாரி போக்குவரத்தால், அடிக்கடி விபத்துகள் நடந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி வாசிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்தை கட்டுப்படுத்துவதாக, மணலி போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பகுதி வாசிகள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.