கடலூர் : கடலூர் கல்வி மாவட்டத்தில் குருப் 4ல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை பணி நியமனம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4ல் 2007-2008 முதல் 2012-13ம்
ஆண்டு வரை கடலூர் கல்வி மாவட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை
(2ம் தேதி) காலை 9 மணிக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமனம் நடக்கிறது.
இந்த நியமனம் கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடக்கிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.