கம்மாபுரம் : கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க., அவைத் தலைவர் ராமசாமி இல்ல திருமண விழாவில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மணமக்களை வாழ்த்தினார்.
கம்மாபுரம்
ஒன்றிய தி.மு.க., அவைத் தலைவர் ராமசாமி இல்ல திருமண விழா விருத்தாசலத்தில்
நடந்தது. தமிழ் முறைப்படி நடந்த திருமணத்திற்கு தலைமை தாங்கிய தி.மு.க.,
பொதுச் செயலர் அன்பழகன், மணமக்கள் மணிகண்டன் - அனிதாவை வாழ்த்தி
பேசினார்.மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஊத்தாங்கால்
ஊராட்சி தலைவர் தட்சிணாமூர்த்தி - மணிமேகலை வரவேற்றனர்.
விழாவில்,
முன்னாள் எம்.பி.,க்கள் கணேசன், குழந்தைவேல், முன்னாள் எம்.எல். ஏ.,க் கள்
குழந்தை தமிழரசன், நந்தகோபாலகிருஷ்ணன், கோவிந்தசாமி, தி.மு.க., ஒன்றிய
செயலர் ஞானமுத்து, நகர செயலர்கள் தண்டபாணி, செந்தில்குமார், முன்னாள்
சேர்மன் முருகன், தொ.மு.ச., பொதுக்குழு உறுப்பினர் ராஜவன்னியன், ஒன்றிய
நிர்வாகிகள் ராஜவேல், சிவக்கொழுந்து, ராயர், பாவாடை கோவிந்தசாமி,
வெங்கட்ராமன், முத்துசாமி, வேல்முருகன், சதாசிவம் உள்ளிட்டோர் மணமக்களை
வாழ்த்தினர்.ராமசாமி - ஆண்டாள் நன்றி கூறினர்.