கடலூர் : தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி நாளை 2ம் தேதி கடலூரில் நடக்கிறது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்களிடம்
உள்ள தமிழில் பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு,
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கவிதை
மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட
அளவிலான போட்டி நாளை 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, கடலூர்,
மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இந்த
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம், இரண்டாம்
பரிசாக 7,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவார்கள்.
அதில்
வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 12
ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நாளை
நடைபெறும் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டியில்
பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் காலை 9 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.