கடலூர் : வருங்கால தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு பெண்களுக்கு உள்ளது என பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன் பேசினார்.
கடலூர்
கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய மன்ற
விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் தலைமை தாங்கினார்.
தமிழ்த் துறை தலைவர் கோமதி வரவேற்றார். ஆங்கிலத் துறை பேராசிரியர் சுசீலா
ஜெயந்தி வாழ்த்திப் பேசினார்.
பட்டிமன்ற பேச்சாளர் ராமச்சந்திரன் "இலக்கியமும், வாழ்க்கையும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
பெண்களுக்கு கடவுள், ஞானத்தை வைத்துள் ளார்.
கடவுளுக்கு
உலகத்தை பாதுகாக்க உதவி செய்வது ஞானமுள்ள பெண்கள்தான். பெண்கள், தங்களின்
பிள்ளைகளை பெற்று வளர்த்தால் போதும் என்ற காலம் இருந்தது. பிள்ளைகளை
சிறப்பான முறையில் வளர்க்க பெண்களுக்கு கல்வி தேவை என்று பாரதியார்
கூறினார்.
ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுப்பதன் மூலமாக தலைமுறை வாழும். ஆனால், ஆண்களுக்கு கல்வி கொடுப்பதன் மூலமாக தனி மனிதனையே சாரும்.
வருங்கால
தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு மாணவ, மாணவிகளுக்கு உள்ளது. "கொலை வெறி
கொலை வெறி' என்ற பாடலை கேட்கும் போது ஒரு விதமான அதிர்வு ஏற்படுகிறது.
இந்த
பாடலை அரசும், சென்சார்போர்டும் தடை செய்யவில்லை. ஆறு வயது குழந்தை கூட
கொலை வெறி பாடலை கேட்கிறது. ஆக இளைய சமுதாயம் எங்கே போய்க்
கொண்டிருக்கிறது. இதனை, இலக்கியம் படிக்கும் பிள்ளைகள் புரிந்து கொள்ள
வேண்டும். உலகம் ஆண்களாலும், பெண்களாலும் நிரப்பப்பட வேண்டும் என்றால் அதனை
நிறைவேற்றும் பொறுப்பு இலக்கியத்திற்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் குழந்தை தெரசா பாத்திமா நன்றி கூறினார்.