சிதம்பரம் : தமிழ்நாடு
அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் சார்பில் 6ம் வகுப்பு முதல் 8ம்
வகுப்பு வரை அறிவியல் மற்றும் கணிதம் பாடம் போதிக்கும் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம் சிதம்பரம்
ராமகிருஷ்ணா பள்ளியில் இன்று துவங்குகிறது.
இன்று நடைபெறும் முகாம்
துவக்க விழாவிற்கு ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியன்
தலைமை தாங்குகிறார். முகாமில் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில்
தாலுகாக்களில் உள்ள 36 பள்ளிகளைச் சேர்ந்த 72 ஆசிரியர்கள்
பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களை கல்வி
உபகரணங்களை கொண்டு மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பது குறித்து
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இணை இயக்குனர் சுந்தரராஜ பெருமாள்,
பேராசிரியர் கண்ணன் பயிற்சி அளிக்கின்றனர்.
நாளை நடைபெறும் முகாமில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய நிர்வாக இயக்குனர் அய்யம்பெருமாள்,
சி.இ.ஓ., ஜோசப் அந்தோணிராஜ், டி.இ.ஓ., சுப்ரமணியன், அறிவியல் ஒளி ஆசிரியர்
சிதம்பரம் பங்கேற்கின்றனர்.