சிதம்பரம் : சிதம்பரத்தில்,
பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மூன்று லட்சம் மதிப்புள்ள நகை மற்றும்
பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட்
மாநிலத்தைச் சேர்ந்தவர் செம்மன் சர்மா மகன் சுதீர் சர்மா, 29; இன்டீரியர்
டெக்கரேட்டரான இவர், கடந்த ஐந்தாண்டாக சிதம்பரம், கீழ வீதி காயத்திரி
அம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருடன், அதே
மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.
சுதிர் சர்மா நேற்று
முன்தினம் வீட்டை பூட்டிக் கொண்டு தனது ஆட்களுடன் வேலைக்கு சென்றார். மாலை
வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று
பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தது.அதில்
வைத்திருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏழு சவரன் நகைகள்
திருடு போயிருந்தது.
இதுகுறித்து சுதிர்சர்மா கொடுத்த புகாரின் பேரில்
சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை
தேடிவருகின்றனர்.