முதுநகர் : அதிக போதைக்காக பிராந்தியில் வார்னீஷ் கலந்து குடித்த தொழிலாளி இறந்தார்.
கடலூர்
முதுநகர், பெரியார் நகரைச் சேர்ந்தவர், சக்திவேல், 38. பெயிண்டர். இவர்
கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் குடிபோதையில் திரிந்தார்.
இந்நிலையில்,
நேற்று முன்தினம் ஊருக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு சென்ற
சக்திவேல் அதிக போதைக்காக பிராந்தியில் வார்னீஷ் கலந்து குடித்து
சுத்துக்குளம், ரங்கா நகரில் மயங்கி கிடந்தார்.அங்கிருந்தவர்கள், அவரை
மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் நேற்று
முன்தினம் இரவு இறந்தார்.இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து
விசாரித்து வருகின்றனர்.