சென்னை:தனியே சென்ற
பெண்ணிடம், ஐந்து சவரன் தாலி சங்கிலியை, மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
பெங்களூருவை சேர்ந்தவர், மூர்த்திபாபு மனைவி ஜெயந்தி, 50. இவர், கொடுங்கையூர் முத்தமிழ் நகரில், உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க, நேற்றுமுன்தினம் காலை சென்னை வந்தார்.
முத்தமிழ் நகர் சந்தை வழியாக நடந்து சென்றபோது, இருசக்கர
வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், ஜெயந்தியின், ஐந்து சவரன் தாலி சங்கிலியை பறித்து
மாயமாகினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.